வெயில்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான
ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ்ப் படங்களில் கதாநயாகனகாவம் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
கௌதம் மேனன் உதவியாளரான மணிநாகராஜ் இயக்கத்தில் 'பென்சில்' படத்தில் அவர் முதலில் நடிக்க
ஆரம்பித்தார். அதன் பின் 'த்ரிஷா இல்லை நயன்தாரா' என்ற படத்திலும் நாயகனாக நடித்து
வருகிறார். தற்போது மூன்றாவதாக 'டார்லிங்' என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தை சாம்
ஆண்டன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
இப்படம் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பிரேம கதா சித்திரம்' படத்தின் ரீமேக். தெலுங்கில் பிரபாகர ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் சுதீர் பாபு, நந்திதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. சுமார் 5 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 20 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை புரிந்தது.
அப்படிப்பட்ட வெற்றிப் படத்தைத்தான் தற்போது 'டார்லிங்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இப்படத்தில் நாயகியாக நடிக்கும் நிக்கி கல்ராணி 'யாகாவாராயினும் நா காக்க' படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். தமிழில் 'ஒரு காதல் செய்வீர்' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான சஞ்சனா-வின் சகோதரிதான் நிக்கி கல்ராணி. இவர் இதற்கு முன் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர். 'டார்லிங்' படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், தமிழில் பிரபல நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

No comments:
Post a Comment