இன்றைய ரிலீஸ்













தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் படங்கள் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. 2014ம் ஆண்டில் இதுவரை 200 படங்கள் 
ரிலீசாகிவிட்டது. வாரத்துக்கு குறைந்தது 5 படங்கள் முதல் 10 படங்கள் ரிலீசாகிறது. இன்று 9 படங்கள் ரிலீசாகிறது.

இன்று ரிலீசாகும் படங்களில் அரண்மணை மட்டுமே பெரிய பட்ஜெட் படம். சுந்தர்.சி இயக்கியுள்ள திரில்லர் காமெடி படம். இதில் வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

தில்லுமுல்லு படத்திற்கு பிறகு பத்ரி இயக்கி உள்ள ஆடாம ஜெயிச்சோமடா இன்று ரிலீசாகிறது. இது கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காமெடி படம். சமீபத்தில் காமெடி நடிகரான அறிமுகமான கருணாகரன் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின் விஜயலட்சுமி. சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ரெட்டவாலு இன்று ரிலீசாகிறது. கல்லூரி அகில்காதல் சரண்யா நடித்திருக்கும் படம். வாலுத்தனமாக சுற்றித் திரியும் ஒருவனுக்கு வரும் காதலும், பிரச்சினையும் கதை. 

ஆள் படம் வித்தியாசமான க்ரைம் திரில்லர். ஒரு இளைஞனை தீவிரவாதிகயாக்க நினைக்கும் ஒரு சர்வதேச தீவிரவாத கும்பலிடமிருந்து அந்த இளைஞன் தப்பித்தானா, தீவிரவாதியாகிறானா? என்கிற கதை.
மடிசார் மாமி டைட்டிலுடன் ஆரம்பிக்கப்பட்ட படம், டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இனிப்பு புளிப்பு என்ற பெயரில் ரிலீசாகிது. இது பேமிலி காமெடிப் படம். 

கூலிக்காக கொலை செய்யும் ஒருவன். தான் செல்போனிலேயே காதலிக்கும் தன் காதலியை அவர் யார் என்று தெரியாமல் கொல்கிற கதை தமிழ் செல்வனும் கலைச் செல்வியும்.

உசிலம்பட்டி பஸ் நிலையத்தையே வீடாக கொண்டு வாழ்கிறவர்களின் வாழ்க்கையை சொல்லுகிற படம் நான் பொண்னொன்று கண்டேன். இதுதவிர புதியவர்கள் இயக்கிய மைந்தன் என்ற படமும். ரகசிய தீவு என்ற ஆங்கில அனிமேஷன் படமும் ரிலீசாகிறது.


No comments:

Post a Comment