விஸ்வரூபம் 2 தான் முதலில் ரிலீஸ்

கமல்ஹாசன் நடிப்பில் ஒரே சமயத்தில் மூன்று படங்கள் உருவாகி வருவதால் எந்தப் படம் முதலில் வரும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே 
மட்டுமல்லாமல் திரையுலகினரிடமும் இருந்து வருகிறது. வெகுநாட்கள் முன்பே எடுத்து முடிக்கப்பட்ட 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மட்டும் கொஞ்சம் செய்ய வேண்டி உள்ளதாம். அவற்றை முடித்ததும் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடலாம் என முடிவு செதுள்ளார்களாம்.'உத்தம வில்லன்' படத்தையும் கமல்ஹாசன் முடித்துள்ள நிலையில் அந்தப் படத்தை பொங்கலுக்கோ அல்லது ஜனவரி மாத இறுதியிலோ வெளியிடலாம் என்றும், மற்றொரு படமான 'பாபநாசம்' படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடலாம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் எப்போதுமே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் சரியான இடைவெளி கொடுத்துத்தான் நடிப்பார். 

ஆனால், 'விஸ்வரூபம் 2' படத் தயாரிப்பில் ஏற்பட்ட சில தாமதங்களால் மற்ற படங்களின் வெளியீட்டுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதோடு, நவம்பர் இறுதியில் ஷங்கரின் '' படமும், டிசம்பரில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படமும் வெளிவர உள்ளதால் அவற்றிற்கு வழிவிட்டு அதன் பின் தமது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும் கமல்ஹாசன் நினைப்பதாகவும் சொல்கிறார்கள்.

இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்டு இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் நலமாக இருக்கும் என திரையுலகினர் கருதுகிறார்களாம்.


No comments:

Post a Comment