வெளிநாட்டில் வளரும் பூஜை















தாமிரபரணி' படத்திற்குப் பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிக்கத் தயாராகி வரும் படம் 'பூஜை'. இப்படத்தில் விஷால் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஹரி இயக்கும் படம் என்றாலே அந்தப் படம் திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று சீக்கிரமே முடிந்து விடும். அப்படித்தான் இந்த 'பூஜை' படமும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக விஷால், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். 


தற்போதெல்லாம் பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் அதிகமாகப் படமாக்கப்படுவதில்லை. அதற்குக் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தனர். தற்போது 'பூஜை' படத்தில் அந்த இடைவெளியை தீர்த்து விட்டனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இனிமையான பாடல்கள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ப்ரியன் அந்தப் பாடல்களை படமாக்கி வருகிறார். 


'பூஜை' திரைப்படத்தில் விஷால் - ஸ்ருதிஹாசன் ஜோடி முதன் முறையாக ஜோடி சேர்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே 'கெமிஸ்ட்ரி' அவ்வளவு அழகாக வந்துள்ளது என படப்பிடிப்புக் குழுவினர் கருதுகிறார்களாம். அதனால்தான் சுசீந்திரன் இயக்க உள்ள அடுத்த படத்திலும் ஸ்ருதியை ஜோடியாக்க விஷால் கேட்டிருக்கிறார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் ஸ்ருதியால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

No comments:

Post a Comment