தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு
படத்தில் சூரியை அறிமுகம் செய்தார் சுசீந்திரன். அந்த படத்தில் 50 பரோட்டா காமெடி
காட்சி மூலம் பிரபலமான சூரி, அந்த படத்திலேயே கவனிக்கப்படும் நடிகராகி விட்டார். அதோடு
பரோட்டா காமெடி மூலம் அவர் பிரபலமானதான் பரோட்டாவும் அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டது.
அதோடு சுசீந்திரன் படங்களில் தொடர்ந்து நடிக்கவும் வாய்ப்பு பெற்று வரும் சூரி, தற்போது அவர் விஷ்ணுவைக்கொண்டு இயக்கி வரும் ஜீவா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்ற நாடுகளில் எல்லாம் கிரிக்கெட்டில் விளையாடித்தான் தோற்பார்கள். ஆனால் நம்ம நாட்டில்தான் விளையாட வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்றுப்போகிறார்கள் என்ற கருத்து அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் விஷ்ணு கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.
அதேபோல் அவருக்கு நண்பராக நடிக்கும் ப்ரோட்டா சூரி பவுலராக நடிக்கிறாராம். ஆனால், விஷ்ணுவைப்போன்று இவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் போதுமான பயிற்சி இல்லை என்பதால், இதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் சூரியை அனுப்பி மூன்று வாரங்களாக பவுலிங் பயிற்சி கொடுத்து பின்னர் நடிக்க வைத்தாராம் சுசீந்திரன்.

No comments:
Post a Comment