தொடர்ந்து
தன் முதல் இடத்தினை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில்
தக்க வைத்திட, அனைத்து வகை மாடல் போன்களையும்
சாம்சங் தயாரித்து வழங்கி வருகிறது. விரைவில், பட்ஜெட் விலையில், தொடக்க நிலை மொபைல் ஸ்மார்ட்
போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மாடல் எண் SMG350E. இது ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட்
சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது.
1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப் இதன்
இயக்கத்திற்கு துணை புரிகிறது. ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. 5 எம்.பி. திறனுடன் கூடிய
பின்புறக் கேமரா ஒன்றும், வீடியோ அழைப்பு பயன்பாட்டிற்கு
முன்புறக் கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,070 ஆக இருக்கும்.
பட்ஜெட்
மற்றும் நடுநிலை போன்கள் விற்பனைச் சந்தையில், சாம்சங் என்றுமே முதன்மை இடத்தினைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால், தற்போது மோட்டாராலோ நிறுவனத்தின் போன்கள், இதற்குச் சரியான போட்டியினை வழங்கி வருகின்றன. அந்த வகையில், மோட்டாராலோ நிறுவனத்தின் அண்மை வெளியீடான, மோட்டோ இ (Moto E) போனுக்கு
போட்டியாக (விலை ரூ. 6,999), சாம்சங்
மேலே குறிப்பிட்ட போனைச் சந்தையில் இறக்குகிறது.