தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் தற்போது தென்னிந்திய அளவில் புகழ் பெற்றுவிட வேண்டும் என்பது இரண்டாவது ஆசைதான், அவர்களின் முதல் ஆசை இந்திய அளவில் புகழ் பெற வேண்டும் என்பதே. இருந்தாலும் முதலில்
இரண்டாவது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகிறார்கள். சமீப காலமாக தமிழில் முன்னணி நடிர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டும், மலையாளத்தில் டப் செய்யப்பட்டும் வெளியாகி வருகின்றன.
பெங்களூரிலும், கேரளாவின் எல்லைப் பகுதிகளிலும் தமிழ்ப் படங்களாகவே வெளியாகின்றன. விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மிகப் பெரும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் அங்கு தாங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தனக்கு கிடைத்த புகழை மனதில் வைத்துக் கொண்டு, மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தனது 'ஜில்லா' படத்தில் முக்கிய வேடம் ஒன்று கொடுத்து கேரளாவில் ஸ்டிராங்காக காலை ஊன்றி விட்டார் விஜய்.
இந்த ஆசை இப்போது சூர்யாவுக்கும் வந்துவிட்டது. 'அஞ்சான்' படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத் பயணத்தை முடித்து விட்டு மறுநாளே கொச்சி சென்று விட்டார் சூர்யா, அவருடன் படத்தின் இயக்குனர் லிங்குசாமியும் சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார். அப்போது, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளேன். அவர் எப்போது என்னை அழைத்தாலும் உடனே அவரது படத்தில் நடிக்க சம்மதிப்பேன் என்று கூறியுள்ளார். தெலுங்குல நாகார்ஜுனா, மலையாளத்துல மோகன்லாலா...நமது நடிகர்களும் ஊருக்குத் தகுந்தபடி பேசக் கற்றுக் கொண்டு விட்டனர்.