உடல்
உறவின் மூலம் தொற்றிக்கொள்ளும் பாலின நோய்கள், எய்ட்ஸ்
போன்றவற்றின் மூலம் பாதிக்கப்பட்டிருப்பின் அந்தக் காரணத்துக்காக விவாகரத்து
வழக்கு தாக்கல் செய்யலாம்.
உலக வாழ்வை துறந்து துறவறம்
மேற்கொள்ளுதல் திருமணமான ஆணோ, பெண்ணோ
இல்லற வாழ்வை துறந்து, சந்நியாசம்
பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதன்
மூலம் பாதிக்கப்படும் துணை, இந்த
அடிப்படைக் காரணத்துக்காக விவாகரத்து கோரலாம்.
இந்து திருமணச் சட்டத்தில்
மட்டுமே இது விவாகரத்துக்கான ஒரு அடிப்படைக் காரணம். உயிருடன் இருப்பதற்கான 7 ஆண்டுகள் வரையில் கேள்வியுறாமல் இருப்பது ஒரு தனிநபர் திருமண பந்தம்
நிலுவையில் இருக்கும் போது, 7 ஆண்டுகள்
வரை எங்கே இருக்கிறார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை என்றாலும்,
அவர் உயிருடன் இருப்பதற்கான
எந்தச் சான்றும் ஆதாரமும் யாராலும் சமர்ப்பிக்கப்பட இயலாத பட்சத்திலும், பாதிக்கப்பட்டவர் இந்த அடிப்படைக் காரணத்துக்காக விவாகரத்து கோரலாம்.
தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான
தீர்ப்புக்குப் பின் ஒரு ஆண்டுக்கு மேல் ஒன்று சேராமல் இருத்தல் கணவருக்கோ,
மனைவிக்கோ எதிராக தற்காலிக
நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்வதற்காக தாக்கல் செய்யப்படும் மனு, அவருக்கு சாதகமாக தீர்ப்பாகி ஒரு ஆண்டுக்குப் பிறகும் இருவரும்
திருமண பந்தத்தில் இணையாத பட்சத்தில், யாரேனும்
ஒருவர் அதன் அடிப்படையில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.