எல்லாரையும் போல் ஒரு கதாநாயகன்.அந்த ரீதியில்தான் அவருடன் நடிக்கிறேன். - ஹன்சிகா

நயன்தாராவுடனான காதலை நிறுத்திக் கொண்ட சிம்பு, பின்னர் ஹன்சிகாவுடன் நெருக்கமானார். இருவரும் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இது நம்ம ஆளு படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இது ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிம்புவுடனான காதலை துண்டித்து விட்டார். எங்கள் காதல் முறிந்து விட்டது என்று சிம்புவும் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.





இதை தொடர்ந்து நயன்தாராவுக்கும், ஹன்சிகாவுக்கும் மறைமுகமான பகை நீடித்து வந்தது. தற்போது ஹன்சிகா நடிப்பதாக இருந்த ஒரு படத்தை நயன்தாரா பறித்ததன் மூலம் தகராறு தீவிரமாகியுள்ளது.
ஒரு பட நிறுவனம் ஹன்சிகாவை அணுகி தங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது. அதில் நடிக்க ஹன்சிகாவும் தயாராகி வந்தார். இந்த நிலையில் அப்படத்தில் இருந்து ஹன்சிகா திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு பதில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
இது ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னை படத்தில் இருந்து ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் நயன்தாராவை எனக்கு போட்டியாக நினைக்கவில்லை. அவர் என்னை விட வயதானவர். எனக்கு சீனியர். எங்கள் இருவருக்கும் ஒருமித்த குணாதிசயங்கள் கிடையாது. நயன்தாராவுக்கு நடிக்கவும், நடனம் ஆடவும் தெரியாது. ஒரே டிரெஸ்ஸை இருவருக்கும் உடுத்த கொடுங்கள். எங்களில் யாருக்கு கவர்ச்சியான தோற்றம் இருக்கிறது என்று பாருங்கள். சிம்புவை நயன்தாரா காதலிக்கிறாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. சிம்பு எல்லாரையும் போல் ஒரு கதாநாயகன். அந்த ரீதியில்தான் அவருடன் நடிக்கிறேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.