குக்கூ இயக்குனரின் அடுத்தடுத்த படங்கள்












பத்திரிகையாளராக இருந்து சினிமா இயக்குனர் ஆனவர் ராஜு முருகன். இவர் இயக்கிய முதல் படமான குக்கூ பரவலான பாராட்டுகளை பெற்றது. பார்வையற்றவர்களின் உலகை யதார்த்தமாக காட்டிய படம். இதனை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. இந்த நிறுவனமே ராஜு முருகனின் அடுத்த படத்தையும் தயாரிப்பதாக அறிவித்திருந்தது.

ராஜுமுருகன் அடுத்த குரங்காட்டி என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது ராம் திருவுடையான் என்ற எழுத்தாளரின் நாவல். இதனை படமாக்கும் உரிமையை அவரிடமிருந்து பெற இருக்கிறார் ராஜு முருகன். இதில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் ராஜு முருகன் அவரிடம் கதை சொல்ல நேரம் கேட்டிருக்கிறார். 

ஒரு வேளை தனுஷ் ஒத்துக் கொண்டால் காதலில் சொதப்புவது எப்படி பாலாஜி மோகன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்து குரங்காட்டியில் அவர் நடிக்கலாம். தனுஷ் ஒத்துக் கொள்ளாவிட்டால் விக்ரமிற்கு ஒரு கதையும், சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையும் தயாராக வைத்திருக்கிறார் ராஜு முருகன்.


No comments:

Post a Comment