லெனோவா ஏ 328 ஸ்மார்ட்போன் ஒருபார்வை
லெனோவா நிறுவனம் தன் ஏ வரிசையில் (A series) புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Lenovo A328 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் திரை 854 x 480 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தருவதாக, 4.5 அங்குல அளவில் உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Mediatek MT6582M ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். பின்புறமாக எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறன் கேமரா இயங்குகிறது. முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. 

இந்த மொபைல் போன் பாதுகாப்பு, டேட்டா பகிர்தல் மற்றும் சில முக்கிய பணிகளை மேற்கொள்ள, லெனோவா நிறுவனத்தின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்து கிடைக்கின்றன. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லெனோவா அறிமுகப்படுத்திய, லெனோவா ஏ 526 மாடல் போனில் இருந்த அதே செயல் அம்சங்கள் இதிலும் உள்ளன. ஆனால், இந்த போனில் கேமராவின் திறன் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
Lenovo A328 மொபைல் போனின் தடிமன் 11 மிமீ. எடை 140 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 7,299 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லெனோவா நிறுவனத்திற்கென தனிப்பட்ட முறையில் இயங்கும் 1,400 விற்பனை மையங்களிலும் மற்றும் பிற மொபைல் போன் விற்பனைக் கடைகளிலும் இந்த போன் சென்ற வாரம் முதல் விற்பனைக்கு வந்துள்ளது.


No comments:

Post a Comment