அஜித் படத்தை இயக்கவில்லை சிறுத்தை சிவா பேட்டி

அஜித், கௌதம் மேனன் இருவரும் முதன்முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகறது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கிறார்.






இந்நிலையில் அஜித் அடுத்ததாக வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் ஊடகங்களில் பரவிவருகிறது.
இதுகுறித்து சிறுத்தை சிவாவிடம் விசாரித்த போது அவர் அஜித் சாரை வைத்து படம் இயக்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வேலை எதையும் ஆரம்பிக்கவில்லை. அஜித் சார் ஒப்புக்கொண்டால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை நானே வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.