கங்கா பற்றி லாரான்ஸ்











நடிகர், நடன இயக்குனர், பட இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து முனியின் இரண்டாம் பாகமாக காஞ்சனாவை இயக்கினார். அது சூப்பர் ஹிட்டானது. தற்போது முனியின் மூன்றாவது பாகமாக கங்காவை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்தப் படம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் முடியவில்லை.
படம தாமதம் என்பது பற்றி ராகவா லாரன்ஸ் அளித்துள்ள விளக்கம் வருமாறு: படப்பிடிப்பு தொடர்ச்சியாகவும், வேகமாகவும் நடந்து கொண்டிருந்தபோது என் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சில மாதங்கள் இருக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் வேகமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது.

வருகிற 4ந் தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கபட உள்ளது. 20 நாட்கள் தொடர்ச்சியாக கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்புகள் நடக்கிறது அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அடுத்து இரண்டு மாதங்கள் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் எல்லா பணிகளும் முடிந்து டிசம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். முனி பட வரிசையில் அதிக செலவில் தயாரிக்கப்படும் படம் இது. தமிழ் தெலுங்கில் உருவாகி வருகிறது. என்றார் லாரன்ஸ்.


No comments:

Post a Comment