ஜெயராம் மகன் நாயகனாக அறிமுகமாகும் " ஒரு பக்க கதை "











தலைப்பு வைப்பதில் கடந்த கால மரபை உடைத்து ட்ரெண்ட் செட் ஏற்படுத்திய படம் - விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். தலைப்புக்காக மட்டுமல்ல வித்தியாசமான கதை அமைப்புக்காகவும் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வெற்றியடைந்த படம் இது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் அப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு மிகப்பெரிய பெயரை தேடிக்கொடுத்தது. சுமார் இரண்டு வருடங்கள் உட்கார்ந்து புதிய படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு அடுத்தப் படம் இயக்க தயாராகிவிட்டார் பாலாஜி தரணிதரன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கும் அடுத்த படத்திற்கு ஒரு பக்க கதை என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சில மலையாளப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த காளிதாஸ் என்ட வீடு அப்புவின்டேயும் என்ற படத்துக்காக 2003 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர். ஒரு பக்க கதை படத்தின் துவக்க விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு கதாநாயகன் காளிதாஸை ஊடகங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.




No comments:

Post a Comment