விஜய் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகலா?













தற்போது தமிழில் ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்கும் பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து சிம்புதேவன் இயக்கததில் விஜய் நடிக்கும் படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை சம்பந்தப்பட்ட நிறுவனம் சொல்வதற்கு முன்பே, தனது டுவிட்டர் மூலம் தெரிவித்தார் ஸ்ருதிஹாசன்.

இதற்கிடையே தற்போது இந்தியில், வெல்கம் பேக், கபார் ஆகிய படங்கள் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அதோடு, தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்தில் குத்தாட்டமும் ஆடுகிறார். ஆக, ஸ்ருதிஹாசன் எப்போதும் போலவே இப்போதும் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களை வேகமாக முடித்துக்கொடுத்து விட்டு, அடுத்து விஜய்யுடன் அவர் நடிப்பார் என்றும் கருதப்பட்டது.

ஆனால் இந்த நேரத்தில், தற்போது தனது டுவிட்டரில், பெரிய படம் இப்போதைக்கு இல்லை. மாற்றங்கள் நடந்துள்ளது. எல்லாம் ஒரு காரணத்திற்காகத்தான் என்று நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக செய்தி வெளியிட்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் விஜய் படம் என்று வெளிப்படையாக சொல்லாதபோதும் அந்த படமாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் முடிவே செய்து விட்டனார். அதோடு, எதற்காக விஜய் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலக வேண்டும் என்ற கேள்விகளும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment