பணம் வசூலித்து படம் தயாரிப்பு












கன்னடத்தில் லூசியா என்ற படத்தை பலரிடம் பணம் வசூலித்து 80 லட்சம் ரூபாய் செலவில் தயாரித்தார்கள். இந்தப் படம் 3 கோடி வசூலித்து பெரும் லாபத்தை கொடுத்தது. இதனால் இந்த பாணியில் படம் எடுக்க நிறைய பேர் ஆர்வமோடு இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த குபீர் படமும் 20 பேர் பணம் போட்டு தயாரித்ததுதான்.


இதற்காக தற்போது மூவி பண்டிங் நெட் ஒர்க் என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். குறைந்த பணத்தை வைத்துக் கொண்டு படம் தயாரிக்கும் ஆசையில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒரு பட்ஜெட்டை தீர்மானித்து படம் எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு லாபத்தை தரும் நிறுவனமாக இதனை உருவாக்கி இருக்கிறார்களாம்.


இந்த நிறுவனத்தின் சார்பில் முதற்கட்டமாக இரண்டு படங்கள் தயாரிக்கிறார்கள். நிறுவனத்தின் இயக்குனரான ஜெய்லானி இயக்கத்தில், சவுண்ட் கேமரா ஆக்ஷன் என்ற படத்தையும், இன்னொரு இயக்குனரான முத்துராமலிங்கன் இயக்கத்தில் ரூபசித்ரா மாமரத்து கிளியே என்ற படத்தையும் தயாரிக்கிறார்கள்.


"வேறு தொழிலில் சம்பாதித்து அந்த பணத்தை கொண்டு வந்து சினிமாவில் கொட்டி வெறும் கையோடு திரும்பி போகிறவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு வழிகாட்டி, அவர்கள் போடும் பணணத்திற்கு உத்தரவாதம் அளித்து, அவர்கள் விரும்பும் சினிமாவை எடுத்து கொடுப்பதுதான் எங்கள் பணி" என்கிறார் இயக்குனர் ஜெய்லானி.



இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனர் மீரா கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment