விஜய்யின் அடுத்த படம் கருடாதிரையுலகில் நுழைந்து 22 வருடங்களைக் கடந்திருக்கும் விஜய், இதுவரை 57 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது சிம்புதேவன் 
இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படம் விஜய் நடிக்கும் 58 ஆவது படம். எனவே விஜய் 58 என்றே அப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைத்திருப்பதாக சொன்னாலும் அந்த தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விஜய் 58 படத்துக்கு கருடா என்று தலைப்பு சூட்டப்பட்டடிருப்பதாகவும், ஜனவரி 1 அன்று அதிகாரபூர்வமாக தலைப்பை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. 

விஜய் 58 என்கிற கருடா படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடித்து வருகிறார்கள். இரண்டு வித்தியாசமான காலகட்டங்களில் இப்படத்தின் கதை கிழ்கிறது. மன்னர் காலகட்டத்தில் ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவியும், இளவரசியாக அதாவது விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும் தளபதியாக சுதீப்பும் நடிக்கிறார்கள். 

இக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை ஈசிஆரில் உத்தண்டி என்ற இடத்தில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான தர்பார் செட்டில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து தற்போது 2ம் கட்டப் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இதில் ஹன்சிகா பங்குபெறும் சில வாள் சண்டைக் காட்சிகளும் இடம்பெறவிருக்கிறது. இதற்காக ஹன்சிகா வாள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.No comments:

Post a Comment