பாலாஜி
சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் சந்தியா. இந்த
படத்தில் முதலில் தோழி கேரக்டருக்குத்தான்
சந்தியா கமிட்டானார். ஆனால் கதாநாயகியாக நடித்த சரண்யா நாக் சரியாக நடிக்கவில்லை என்பதால், அவரை தோழியாக்கி விட்டு, தோழியாக நடித்து வந்த சந்தியாவை காதல் படத்தின் கதாநாயகி ஆக்கினார் பாலாஜி சக்திவேல்.
அதோடு, அந்த படமும் ஹிட்டடித்ததால், அதையடுத்து ஜீவாவுடன் டிஷ்யூம், ப்ருத்விராஜூடன் கண்ணா மூச்சு ஏன்டா , கூடல் நகர் உள்பட சில படங்களில் நடித்தார் சந்தியா. ஆனால் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் மலையாள படங்களில் நடித்து வந்த அவர், சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழில் யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தார்.
அதையடுத்து இப்போது இன்னொரு காமெடியனான சூரிக்கு ஜோடியாக கத்துக்குட்டி என்ற படத்தில் நடிக்கிறார் சந்தியா. அவருக்கு ஜோடியாக நடிப்பதோடு, சூரியுடன் இணைந்து ஒரு பாட்டுக்கும குத்தாட்டமாடியிருக்கிறாராம். கதாநாயகி வாய்ப்பு குறைந்தபோது முன்னணி ஹீரோக்களுடன் குத்தாட்டமாடவே மறுத்து வந்த சந்தியா, இப்போது சூரியுடன் ஆடியிருப்பதோடு, அடுத்தடுத்து கேரக்டர், குத்தாட்டம் என எந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிப்பேன் என்று கோலிவுட்டிற்கு அறிவித்திருக்கிறார்.

No comments:
Post a Comment