கார்த்தி தற்போது மெட்ராஸ் மற்றும்
கொம்பன் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு இதற்குதானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுலின் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு
கஷ்மோரா என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கார்த்தி இரண்டாவ
முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே சிறுத்தை படத்தில் இரண்டு
வேடங்களில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி கோகுல் கூறியதாவது: கார்த்தி இரண்டு வேடங்களில் நடிப்பது உண்மைதான் அது என்ன கேரக்டர் என்று சொன்னால் கதை தெரிந்து விடும். கஷ்மோரா என்பது ஒருவரின் பெயர் அதுபற்றிய விளக்கம் படத்தில் தெரிய வரும். இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா போன்று இது காமெடி படம் அல்ல. ஆனால் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனையும், காமெடியனாக வடிவேலுவையும் மனதில் வைத்திருக்கிறேன். இன்னும் அவர்களோடு பேசவில்லை. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.

No comments:
Post a Comment