மைக்ரோசாப்ட், அக்டோபர்
முதல் வாரத்தில், முன்பு
அறிவித்தபடி, தன்
நோக்கியா லூமியா 730 டூயல்
சிம் ஸ்மார்ட் போனை, இந்தியாவில்
விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது செல்பி வசதியை மையமாகக் கொண்டு
வடிவமைக்கப்பட்டது. இதன் திரை 4.7 அங்குலத்தில்
OLED டிஸ்பிளேயுடன்
அமைந்துள்ளது. 1.2 கிகா
ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 400
ப்ராசசர் தரப்பட்டுள்ளது. லூமியா டெனிம் அப்டேட்
கொண்ட விண்டோஸ் போன் 8.1 ஆப்பரேட்டிங்
சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதன் முன்புறக் கேமரா 5
மெகா பிக்ஸெல் திறனுடன், வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் focal length 24 மிமீ.
இதனால், தானாகவே
போட்டோ எடுக்கும் செல்பி வசதி, கூடுதல்
திறனுடன் இயங்குகிறது. பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து 6.7 மெகா பிக்ஸெல் திறனுடன் இயங்குகிறது.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் ராம் நினைவகத் திறன் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ்., மற்றும் என்.எப்.சி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,200 mAh திறன் கொண்டது.
நல்ல பச்சை, ஆரஞ்ச், கருப்பு கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும்
நோக்கியா லூமியா 730 டூயல்
சிம் ஸ்மார்ட் போன், இந்தியாவில்
ரூ.15,299 என
விலையிடப்பட்டு அறிமுகமாகியுள்ளது. இதனை வாங்குவோருக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில்
ஒரு டெரா பைட் இடம் இலவசமாகக் கிடைக்கிறது. அதன் பின் தொடர்ந்து பயன்படுத்த
மாதந்தோறும் ரூ.125 கட்டணமாகச்
செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment