சென்ற மாதம்
அறிவிக்கப்பட்ட சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா டி3 என்ற மொபைல்
போன், ரூ.27,990 என
விலையிடப்பட்டு
விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 5.3 அங்குல திரை இதன் சிறப்பம்சமாகும். இதில், 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 400 சிப் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. (கிட்கேட்). இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதில் சோனியின் புகழ்பெற்ற எக்ஸ்மார் ஆர்.எஸ். சென்சார் உள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவும் அதிக திறன் கொண்டதாக உள்ளது. முன்புறமாக 1.1. எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது.
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி வரை அதிகப் படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் தடிமன் 7 மிமீ. இதனைச் சுற்றி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம் தரப்பட்டுள்ளது. பவர் பட்டன் அலுமினியத்தால் ஆனது. 5.3 அகலத் திரையுடன் கூடிய ஸ்மார்ட் போன்களில், இதுவே குறைந்த தடிமன் கொண்டது என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் உள்ள பேட்டரி 2,500 mAh திறன் கொண்டது. இந்த போன் கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.27,900.

No comments:
Post a Comment