மொபைல் போன்
வாங்குவோர் அனைவரும், தற்போது ஸ்மார்ட் போன்களையே நாடுகின்றனர். இவர்கள்
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்
வசதிகளைக் கொண்ட போன்களை எதிர்பார்க்கின்றனர்.

இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, செல்கான்
நிறுவனம், அண்மையில் ரூ. 5,999 என்று
விலையிட்டு, புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் பெயர் Signature Two
A500. இது வர்த்தக இணைய தளமான ப்ளிப் கார்ட்
நிறுவனத்துடனான ஒப்பந்த்த்தின் கீழ் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்களாக, 5 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6572M ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் இயக்கம், 5 எம்.பி. திறனுடன் ப்ளாஷ் இணைந்த பின்புறக் கேமரா, -0.3 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் தடிமன் 9.9. மிமீ. எடை 147 கிராம். ராம் மெமரி 1 ஜி.பி. தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை- பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகியவை தரப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதனுடன் இலவசமாக ப்ளிப் கவர் ஒன்று தரப்படுகிறது. சென்ற வாரம் முதல் ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் விற்பனைக்கு உள்ளது.
இந்த மாடல் மொபைல் போன், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸென்போன் 4, மோட்டோ இ ஆகிய மொபைல் போன்களோடு விற்பனையில் போட்டியிடும் என செல்கான் நிறுவன இயக்குநர் முரளி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment