எங்கேயும்
எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் அதையடுத்து விக்ரம் பிரபுவைக்கொண்டு இவன் வேற
மாதிரி என்ற படத்தை இயக்கினார்.
முன்னதாக அந்த படத்தில் நாயகியாக நடிக்க நூற்றுக்கணக்கான நடிகைகளை அழைத்து போட்டோ செஷன் நடத்தி திருப்பி அனுப்பிக்கொண்டேயிருந்தார். இறுதியாக டில்லியில் இருந்து வந்த சுரபிதான் ஓ.கே ஆனார்.
அந்த படத்தில் சுரபி நடித்து வந்தபோது, டெல்லி அழகி என்று சொல்லி பெரிய அளவில் அவருக்கு பப்ளிசிட்டியும கொடுத்தனர். அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே பல நிறுவனங்கள் அவரை புக் பண்ண வட்டம் போட்டன. ஆனால் சுரபியோ, இந்த படம் ரிலீசான பிறகுதான் அடுத்த படத்தில் கமிட்டாவேன் என்று தேடி வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார்.
அதனால் அந்த வாய்ப்புகள் வெவ்வேறு நடிகைகளுக்கு சென்றன. இந்த நிலையில், இவன் வேற மாதிரி படமும் ஓடவில்லை. விளைவு, சுரபி மீதிருந்த எதிர்ப்புகள் குறைந்துவிட்டது. அதனால் அவரை அடுத்தபடியாக நாயகியாக புக் பண்ண யாரும் முன்வரவில்லை. அதனால்தான் தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சுசீந்திரனின் ஜீவா ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார் அவர்.
அதையடுத்து புதிய படங்கள் எதுவும் கமிட்டாகாததால் தற்போது மும்பைக்கு முகாமை மாற்றி விட்டார் சுரபி. அவர் சென்றநேரம் புதிய படவாய்ப்புகள் கிடைக்காதபோதும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷனுடன் ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுரபிக்கு கிடைத்துள்ளதாம். அதனால இந்தி படமே கிடைத்த மகிழ்ச்சியில் அதில் நடித்துள்ளாராம்.

No comments:
Post a Comment