காதல் சொல்ல வந்தேன்
படத்தில் அறிமுகமானவர் பாலாஜி. அதன் பிறகு ஒரு ஊர்ல என்ற படத்தில் மனநலம்
பாதிக்கப்பட்டவராக நடித்தார். இப்போது நகர்வலம் படத்தில் தண்ணீர் லாரி டிரைவராக
நடிக்கிறார். சென்னை நகரில் தண்ணீர் சப்ளை செய்யும் லாரி டிரைவருக்கும், அடுக்குமாடி காலணியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கும் இடையில் வரும்
காதலும், அதைத் தொடர்ந்து வரும் பிரச்னைளும்தான் கதை. ஹீரோயினியாக தீக்ஷிதா
என்ற புதுமுகம் நடிக்கிறார். தென்றல் ஒளிப்பதிவு செய்கிறார். பவன் இசை
அமைக்கிறார்.
"சென்னை நகர மக்களின் நரக வாழ்க்கையை பதிவு செய்கிற படம். நடுத்தர கோட்டுக்கு கீழேயும், ஏழ்மைக்கு சற்று மேலேயும் வாழ்கிற மக்களின் (லோயர் மிடில் கிளாஸ்) வாழ்க்கை ரொம்ப கொடுமையானது. ஒரு எளிய காதலின் வழியே அவர்கள் வாழ்க்கையை காட்டுகிறோம். சென்னை நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியான அண்ணாநகர், சைதாப்பேட்டை, கே.கே நர், கண்ணகி நகர் பகுதிகளில் உள்ள ஹவுசிங் போர்ட் காலனியில் படமாக்கி உள்ளோம்" என்கிறார் இயக்குனர் மார்க்ஸ்.

No comments:
Post a Comment