மீண்டும் " எனக்குள் ஒருவன் "














கடந்த வருடம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'லூசியா'. இந்தப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய கடும்போட்டி நிலவியது.
கடைசியில்... சி.வி.குமாரின் 'திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் லூசியா படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கியது.
இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். லூசியா கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்தவரே தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் பிரசாத் மாறார் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்காமலே இருந்தனர்.
தற்போது, 'எனக்குள் ஒருவன்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1984 ல் வெளியான படம்தான் -எனக்குள் ஒருவன்.
ஏறக்குறைய 30 வருடங்களுக்குப் பிறகு இந்த பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராக உள்ளது.
எனக்குள் ஒருவன் படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்திருந்தது. எனவே முறைப்படி கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்று, சித்தார்த் நடிக்கும் படத்திற்கு 'எனக்குள் ஒருவன்' என்ற தலைப்பை வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment