வேர்டில் எண்களை எழுத்தால் எப்படி எழுதுவது ?












எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது 
இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate seven biscuits” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar)இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.

1.
ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். 

அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். 

பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.

பாரா பார்டர் நீக்க: சிலவேளைகளில், நாம் தயாரிக்கும் டாகுமெண்ட்களில், சில பாராக்களில் படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, அதற்கு மட்டும் சுற்றி கட்டம் கட்டி இருப்போம். பின் நாளில் அதனை நீக்க விரும்புவோம். பல வேளைகளில் இதனை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் விழிப்போம்.  இதோ,அதற்கான வழி:

1.
எந்த பாராவிலிருந்து பார்டரை நீக்க வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு நிறுத்தவும். 

2.
ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3.
பாரா குரூப்பில் உள்ள பார்டர்ஸ் டூலில் (Borders tool), வலதுபுறம் கீழாக நோக்கும் அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். வேர்ட், இப்போது பல ஆப்ஷன்களைக் காட்டும்.

4.
இதில் No Border என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பாராவினைச் சுற்றி உள்ள பார்டரை நீக்கும்.

வண்ணத்தில் ஹைலைட்டிங்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்து கையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங் களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.

இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். 

மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.


No comments:

Post a Comment