ரஜினி கண்டிப்பாக
அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அப்போதெல்லாம்
தனது படங்களில் முக்கிய
அரசியல் தலைவர்களுக்கு எதிராக பஞ்ச் டயலாக்குகள் பேசி பரபரப்பை கூட்டி வந்தார் ரஜினி. முக்கியமாக, படையப்பா போன்ற படங்களில் முக்கிய அரசியல் தலைவர்களை குறிவைத்தே வசனங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன.
ஆனால், காலத்தின் மாற்றம், ரஜினியின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. அதிலும், ராணா படத்தில் நடிக்கயிருந்த சமயம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடல்நிலையில் மாற்றம் என சில விசயங்கள் அவரை சாந்தப்படுத்தி விட்டன. ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான். ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என்றெல்லாம் சூடான வசனம் பேசிவந்த ரஜினியிடத்தில் அந்த மாதிரி டயலாக்குகள் எதுவுமே வெளிப்படவில்லை. அதனால் ரஜினி எதிர்காலத்தில் அரசியலுககு வருவார் என்ற நம்பிக்கைகளும் படிப்படியாக குறைந்து கொண்டு வந்தன..
இந்த நேரத்தில், கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் வீடுதேடி சென்று மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார் பிரதமர் மோடி. அதனால் அதிலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் மீண்டும் தெரிவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பாஜகாவில் சேர மாட்டார். தனிக்கட்சி தொடங்குவார் என்று இப்போது மறுபடியும் ரஜினி பற்றிய புதிய அரசியல் செய்திகள் புகையத் தொடங்கியிருக்கிறது. இந்த செய்தி நிஜமா?

No comments:
Post a Comment