புலி படத்தில் விஜய்-சுருதி இணைந்து பாடும் பாடல்விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், ஸ்ரீதேவி கபூர், கன்னட நடிகர் சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நட்டி என்ற நடராஜ் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். அதில் ஒரு பாடலுக்காக ஈசிஆரில் பிம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கியுள்ளனர்.
இன்னும் மூன்று பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார் தேவிஸ்ரீபிரசாத். இந்த மூன்று பாடல்களில் ஒரு பாடலுக்கு விஜய்-சுருதியை பாட வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.
தான் நடிக்கும் படங்களில் வழக்கமாக ஒரு பாடல் பாடிவருகிறார் விஜய். சமீபத்தில் வெளியான கத்தி படத்தில் செல்பிபுள்ள…’ பாடலை விஜய் பாடியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. சுருதிஹாசனும் பாட்டு பாடுவதில் வல்லவர். இவர்கள் கூட்டணியில் சூப்பர் ஹிட் பாடல் புலிபடத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


No comments:

Post a Comment