விஷ்ணுவின் இன்று நேற்று நாளை

ஜீவாபடத்திற்குப் பிறகு விஷ்ணு நடித்து வரும் படம் இன்று நேற்று நாளை’. இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக அமரகாவியம்படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார்.

விஷ்ணு நடிப்பில் ஏற்கனவே வெளியான முண்டாசுபட்டி படம் போல் இப்படத்தை முழுக்க முழுக்க காமெடியாக எடுத்திருக்கிறார். இப்படத்தில் கருணாகரன் விஷ்ணுவிற்கு நண்பனாக நடித்திருக்கிறார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிந்து விட்டன. தற்போது படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.


No comments:

Post a Comment