மாயா திரைபடத்தில் நயன்தாராஇது நம்ம ஆளு, தனி ஒருவன், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதில் நண்பேன்டா படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் 2 திரைக்கு வருகிறது.
இவை தவிர, நைட்ஷோ என்ற ஹாரர் படத்திலும் நயன்தாரா நடித்து வந்தார். அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ஆரி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பெயரை தற்போது மாயா என்று மாற்றியுள்ளனர். நைட்ஷோ ஆங்கிலப் பெயர், வரிச்சலுகை கிடைக்காது என்பதால் பெயரை மாற்றியதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment