எலி படத்தில் சி.ஐ.டியாக வடிவேலுதெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை 1970களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலு சி.ஐ.டியாக நடிக்கிறார். நாட்டில் ஒரு பெரிய விஷயம் நடக்கிறது. அதை போலீஸ், அரசாங்கம், அதிகாரிகள் கண்டுபிடிக்க போராடுகிறார்கள். 

ஆனால் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் சி.ஐ.டியாக இருக்கும் வடிவேலு அந்த விஷயத்தை எலி மாதிரி சந்து பொந்துக்குள் புகுந்து கண்டுபிடிப்பதை காமெடியாக சொல்லும் படம். ஏற்கெனவே சீனாதான என்ற படத்தில் வடிவேலு சி.ஐ.டியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எலி படத்திற்கு பிறகு நான்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.No comments:

Post a Comment