லாவா ஐரிஸ் எக்ஸ்5 ஸ்மார்ட் போன் ஒரு பார்வை












மொபைல் ஸ்மார்ட் போன்களில் தங்களைத் தாங்களே போட்டோ எடுக்கும் வசதியினை செல்பி என்று அனைவரும் அழைக்கின்றனர். அதனை 
மையமாகக் கொண்டு, லாவா நிறுவனம் ஐரிஸ் எக்ஸ்5 (Lava Iris X5) என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,799.
இந்த போன் அமேஸான் டாட் இன் இணைய வர்த்தக தளம் வழியாகவே தற்போது வாங்க முடியும். இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 5 அங்குலத்தில் 1280 x 720 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுவதாக அமைந்துள்ளது. இதன் ப்ராசசரின் வேகம் 1.2 கிகா ஹெர்ட்ஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட். வழக்கமான சிம் மற்றும் மைக்ரோ சிம் என இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இணைத்து இயக்கலாம். பின்புறக் கேமரா 8 எம்.பி. திறனுடனும், டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் உடனும் இயங்குகிறது. இதில் ஆம்னிவிஷன் பி.எஸ்.ஐ. சென்சார் தரப்பட்டுள்ளது. போனின் தடிமன் 7.5 மிமீ. எடை 135 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி, 3ஜி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. இதன் பேட்டரி 2,100 mAh திறன் கொண்டது.

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வடிவமைக்கபட்டிருக்கும் இந்த போன் சலுகை விலையாக ரூ. 8,649க்கு வழங்கப்படுகிறது. 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. விற்பனையின் முதல் நாள் இதனை வாங்கியோருக்கும் இன்னும் பல பரிசுகள் வழங்கப்பட்டன. 


No comments:

Post a Comment