ஆம்பள திரைப்படம் ஒரு முன்னோட்டம்









அரண்மனை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாகநடிக்கிறார். அவர் தவிர இன்னும் இரண்டு முக்கிய ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். விஷாலின் அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள்.


விஷாலின் தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள்தான் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. விஷால் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அவருக்கு தங்கள் மகளை கல்யாணம் செய்து வைத்து விட்டால் அண்ணன் சொத்துக்கள் தங்களுக்கு வந்துவிடும் என்று தங்கைகள் திட்டமிடுகிறார்கள். தங்கள் மகளைத்தான் விஷால் காதலிக்க வேண்டும் என்று அத்தைகள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் போடும் திட்டங்களும் அந்த திட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் விஷால் தப்பிப்பதும்தான் காமெடி கதை. கடைசியில் மூன்று அத்தைகளில் எந்த அத்தை மகளை விஷால் காதலிக்கிறார், கைவிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ். படத்திற்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் இது.


No comments:

Post a Comment