ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வந்து 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது












இன்று மிகச் சாதரணமாக அனைவராலும் பயன்படுத்தப்படும், விரும்பப்படும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வந்து 20 ஆண்டுகளைக் 
கடந்துள்ளது. ஐ.பி.எம். சைமன் மொபைல் போன் என்ற பெயரில் (IBM Simon mobile phone) முதல் ஸ்மார்ட் போன் வெளியானது. அமெரிக்க மொபைல் போன் சேவை நிறுவனமான BelSelf முதன் முதலில் இதனை 1994ல் விற்பனைக்குக் கொண்டு வந்தது. 

அதன் நீளம் 23 செ.மீ. எடை அரை கிலோ. ஏறத்தாழ நாம் பயன்படுத்தும் செங்கல் அளவிற்கு அது இருந்தது. மிக எளிமையானதாகவும், நாம் விரும்பும் அனைத்து பணிகளையும் மேற்கொண்டதால், அதனை சைமன் எனப் பெயரிட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. 


இந்த சைமன் ஸ்மார்ட் போனில், எல்.சி.டி. திரை டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் கொண்டதாக இருந்தது. இதில் தரப்பட்டிருந்த சாப்ட்வேர் மூலம் நோட்ஸ் அமைக்க முடிந்தது. காலண்டர், காண்டாக்ட் ஆகியவை நிர்வகிக்கப்பட்டன. 
பேக்ஸ் அனுப்ப முடிந்தது. அழைப்புகளும் எளிதாக அனுப்பப்பட்டு பெறப்பட்டன. 

பல்வேறு அப்ளிகேஷன்களை கார்ட்கள் மூலம் இணைக்க, பக்கவாட்டில் ஸ்லாட் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஐபோனின் முன்னோடி என அழைக்கலாம் என லண்டன் மியூசிய காப்பாளர் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமே. அப்போது இந்த மாடல் விற்பனை 50 ஆயிரத்தினைத் தொட்டது. 


வரும் அக்டோபரில், இந்த பழைய போன் ஒன்றை லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில், காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தகவல் தொடர்பில் வளர்ச்சி என்ற தலைப்பிலான பிரிவில், இது காட்சிக்கு வரும்.

No comments:

Post a Comment