செப் 26 கார்த்தியின் மெட்ராஸ் ரிலீஸ்













தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்ததால் சட்டென காணாமல் போய்விட்டார் கார்த்தி. அதிலும் குறிப்பாக, கடைசியாய் அவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் ரசிகர்களை தலை தெறிக்க ஓட வைத்துவிட்டது.
எனவே, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவரத் தயாராக உள்ள மெட்ராஸ் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கினர். தியேட்டர்காரர்களிடமிருந்தும் மெட்ராஸ் படத்துக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
அப்படியும் சூழ்நிலை மெட்ராஸ் படத்துக்கு பாசிட்டிவ்வாக இல்லை என்பதை புரிந்து கொண்ட மெட்ராஸ் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். அதாவது, சி.வி.குமார், எல்ரெட் குமார் போன்ற சில தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி போட்டு ட்ரீம் ஃபேக்டரி என்ற பெயரில் புதிய விநியோக கம்பெனியையே தொடங்கிவிட்டார்.
மெட்ராஸ் படத்தை இந்த ட்ரீம் ஃபேக்டரி கம்பெனிதான் வெளியிட இருக்கிறது.
மெட்ராஸ் படத்தை வெளியிட விநியோக கம்பெனியை தொடங்கிவிட்டாலும், படத்தை திரையிட தியேட்டர்கள் வேண்டும் அல்லவா?
கார்த்தி படம் என்பதால் தியேட்டர்காரர்கள் யாரும் தியேட்டர் தர முன்வரவில்லை, தவிர வாரம் வாரம் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்ததால் மெட்ராஸ் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.
இந்தப் பிரச்சனை காரணமாக மெட்ராஸ் படம் காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் ரிலீஸ் ஆகாமலே கிடந்தது.
இந்நிலையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு வருகிற 26-ஆம் தேதி மெட்ராஸ் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஞானவேல்ராஜா.


No comments:

Post a Comment