எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ்

வெளுத்துக்கட்டு படத்திற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இது அவரின் 66வது படம். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இது 3 கதைகள் கொண்ட படம். இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது: சினிமாவில் டூரிங் டாக்கீசுக்கு தனியான ஒரு இடம் உண்டு. பகல் முழுவதும் உழைத்து களைக்கும் ஏழை உழைப்பாளிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடமாக டூரிங் டாக்கீஸ் இருந்தது. 25 வருடங்கள் நம் மக்களின் வாழ்க்கையோடும், உணர்வோடும் பின்னிப் பிணைந்திருந்தது டூரிங் டாக்கீஸ். இன்று டூரிங் டாக்கீஸ் இல்லை. அதை கதைகளமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கி வருகிறேன்.
இதில் 3 தனித்தனி கதைகள் இருக்கிறது. அது மூன்று வித்தியாசமான வாழ்க்கையை சொல்லும். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர்கள், எட்டிட்டர்கள், டெக்னீஷியன்கள் பணியாற்-றுகிறார்கள். மூன்ற கதைகளும் சந்திக்கும் இடமாக டூரிங் டாக்கீஸ் இருக்கும். எனது சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு முக்கியமான பதிவாக இருக்கும். என்கிறார் எஸ்.ஏ.சி.

No comments:

Post a Comment