கொம்பன் பொங்கலுக்கு வரான்மெட்ராஸ்படத்திற்கு பிறகு கார்த்தி கொம்பன்என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். குட்டிப்புலிபடத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். கோவை சரளா, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து டப்பிங் பணியை வேகமாக நடத்தி வருகின்றனர். இப்படத்தின் பாடல்களை இம்மாதமும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே பொங்கல் தினத்தன்று, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படமும், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால்படமும், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆம்பளபடமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கி சட்டைபடமும் வெளியாகவுள்ளது. இந்த நான்கு படங்களுடன் தற்போது கொம்பன் படமும் களம் இறங்குகிறது.


No comments:

Post a Comment