உலகநாயகனின் அடுத்த படம்

கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம், உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் -2 என வரிசை கட்டி படங்கள் வெளிவர உள்ள நிலையில், அவர் அடுத்த 
படத்திற்கு தயாராகி விட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, மகள் ஸ்ருதிஹாசனின் கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.

அதில் கமல் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம் குறித்து ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். அதற்கு "வாமமார்க்கம்" என்று பெயரிட்டுள்ளேன். வாமமார்க்கம் என்றால் எனக்கு தெரிந்தவரை, இடது கை பாதை என்று பொருள். ஆனால், சிலர் அகோரிகளை, வாமமார்ஜிகள் என்று கூறுகிறார்கள். அது மதம் சம்பந்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினரை, நம்நாட்டில் இடதுசாரிகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவருக்கும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளதால், இதை படமாக்கலாம் என்று நினைத்துள்ளேன். 

மருதநாயகம், மர்மயோகி, விருமாண்டி மற்றும் விஸ்வரூபம் கதையின் கரு எனக்கு எவ்வாறு மனதில் தோன்றியதோ, அதுபோல, தான் இந்த வாமமார்க்கத்தின் கதையும் தோன்றியது. இந்த படம் உருவாக, குறைந்தது 7 ஆண்டுகள் தேவைப்படும் என்று கமல் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment