ரஜினியின் அடுத்த படத்தில் அனுஷ்கா மற்றம் சோனாக்க்ஷி சின்ஹா ஜோடி

'கோச்சடையான்' படம் ரிலீஸ் ஆகாத நிலையில், ரஜினி அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்துவிட்டன.

ஏற்கனவே நாம் யூகித்ததைப் போல படத்தை கே.எஸ்.ரவிகுமார்  இயக்குகிறார். அனுஷ்கா ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக நடிக்க சோனாக்‌ஷி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.
இப்படத்திற்கு 'சாருலதா' பட இயக்குநர் பொன்.குமரன் கதை, வசனம் எழுதுகிறார். திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார்.
இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே ரஜினி நடித்த 'எந்திரன்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 'மஜா' போன்ற படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை நடிகர் அருண்பாண்டியன் கவனிக்கிறார். இவர் இதற்கு முன் ஐங்கரன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர் விலகி இப்போது ராக்லைன் வெங்கடேஷ் உடன் இணைந்திருக்கிறார்.
ஏப்ரல்20ம் தேதி இப்படத்தின் பூஜை நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் துவங்க உள்ளது.