திரிஷ்யம் - தமிழில் பாபநாசம்

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ''திரிஷ்யம்''. மோகன்லால் நடித்த இந்த வெற்றிப்படம் கன்னடம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தன. தற்போது கமலை வைத்து திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். மலையாளத்தில் திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜித்துஜோசஃபே தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார்.

கமல் தற்போது நடித்து வரும் உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்களில் முடிகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து, ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரிஷ்யம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்திற்கு பாபநாசம் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.

அதென்ன பாபநாசம்? திருநெல்வேலி பின்னணியில் இப்படம் எடுக்கப்படவிருப்பதாகவும், படத்தில் கமல் நெல்லை தமிழில் பேசி நடிக்க இருக்கிறார் என்றும் கூடுதல் தகவல்களும் அடிபடுகிறது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடிப்பதாக சொல்லப்பட்டாலும், யார் நடிக்கிறார் என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

மலையாள திரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் கன்னட ரீ-மேக்கிலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவர் தான் தமிழ் ரீ-மேக்கிலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த வேடத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்வி மேற்கொள்ளப்பட்டது. அவர் மறுத்துவிட்டதால் ஆஷா சரத்தையே கமிட் பண்ணி இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment