பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கும் முதல் படம் பாம்பு சட்டை















இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா சதுரங்க வேட்டைபடத்தை தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை’.
இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குனர் சங்கரின் இணை இயக்குனர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது.
இப்படத்தின் மூலம் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற்ற அசீஸ் அசோக் இசையமைப்பளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டபடி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முனைப்பாக உள்ளார்.


No comments:

Post a Comment