விஷாலுடன் பூனம் பஜ்வாஅரண்மனைபடத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம்ஆம்பள’. இதில் விஷால் நாயகனாகவும், ஹன்சிகா, மாதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சந்தானம், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டணியில் தற்போது பூனம் பஜ்வாவும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் சிறப்பான பாடலுக்கு விஷாலுடன் நடனம் ஆடவுள்ளார் பூனம் பஜ்வா. இவர் தற்போது லஷ்மணன் இயக்கிவரும் ரோமியோ ஜூலியட்படத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக தயாராகிவரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி மூலம் விஷால் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பாடல்களை இம்மாதமும் படத்தை பொங்கலுக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment