ஐ ஜனவரி 9-ம்தேதி ரிலீஸ்
விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ’. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு, படம் எப்போது ரிலீசாகும் என்று திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். முதலில் தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் இறுதி கட்ட பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிபோனது. அதன்பிறகு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொங்கல் அன்று அஜீத்தின் என்னை அறிந்தால்படமும் ரிலீசாகவுள்ளது. இதனால் இவ்விரு படங்களுக்கும் மோதல் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை ஜனவரி 9-ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment