80 கோடியில் தல படம்கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தற்போது என்னை அறிந்தால்படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்து சிறுத்தைவீரம் படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
வீரம் படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித், சிவா இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வமூகவலைத்தளங்களில் தல 56 என்று குறிப்பிட்டு தங்கள் எண்ணங்களை பகிரத்தொடங்கிவிட்டனர்.
அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இரக்க, இன்னொரு பக்கம், தல 56 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்களில் எதுவுமே உண்மை இல்லை என்று மறுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.
என்னை அறிந்தால்படத்திற்குப் பிறகு அஜித், எனது இயக்கத்தில் நடிக்கவிருப்பது உண்மைதான். ஆனால் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடி யார், இசை அமைப்பாளர் யார், தயாரிப்பாளர் யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சிவா. இப்படம் பற்றி கூடுதல் தகவல் ஒன்றுரூ.80 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.


No comments:

Post a Comment