இளைய தளபதிக்கு பிடித்த திரிஷ்யம்
நடிகர் விஜய் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:
என் படங்களுக்கு சர்ச்சைகள் கிளம்பும்போதெல்லாம் அந்த படத்தில் உழைத்த மக்களை எண்ணி வருத்தப்படுவேன். எல்லாமே அனுபவம்தான். கடவுள்தான் இந்த வாழ்க்கையை கொடுத்தார். வாழ்க்கை புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. எல்லா பக்கங்களையும் சந்தோஷமாக கடக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதே கூற முடியாது.
பலனை எதிர்பாராமல் கடமையை செய்கிறேன். ரசிகர்கள் எனக்கு அதிகமான அன்பை கொடுத்து இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்ததை திருப்பி கொடுப்பேன். ரசிகர்கள் வெற்றியில் என்னுடன் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. தோல்வியில் தட்டிக் கொடுத்தவர்கள். நடிகன், ரசிகன் என்பதையும் தாண்டி எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.
ரசிகர்கள் அன்புக்கு முன்னால் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி பட்டங்கள் எல்லாம் பெரியதாக தெரிய வில்லை. சமீபத்திய படங்களில் ஜிகர்தண்டா, திரிஷ்யம் படங்கள் எனக்கு பிடித்தன.
இவ்வாறு விஜய் கூறினார்.


No comments:

Post a Comment