விஜய் - சிம்புதேவன் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியதுஇயக்குநர் சிம்புதேவனின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ஃபேண்டஸி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. இந்தப் படத்தில் முன்னாள் நடிகை ஸ்ரீதேவியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிம்புதேவன், அடுத்ததாக நடிகர் விஜய்யை நாயகனாக வைத்து சரித்திர ஃபேண்டஸி படத்த்தை இயக்குகிறார். கத்தியின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் துவங்கியது. 100 நடனக் கலைஞர்களுடன் விஜய் பங்கேற்கும் ஒரு பாடலின் படப்பிடிப்பும் நடைபெறுவதாகத் தெரிகிறது. மேலும் 45 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் மேலும் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, கிச்சா சுதீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி ஹன்சிகாவின் அம்மா வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment