உலோக வெளிப்
பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்ட தன் முதல் ஸ்மார்ட்போன் காலக்ஸி ஆல்பா போனை
அண்மையில் இந்தியாவில், சாம்சங்
விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் தடிமன் 6.7 மிமீ. மட்டுமே. இதில் 4.7 அங்குல AMOLED டிஸ்பிளே திரை 1280 x 720 பிக்ஸெல்களுடன் காட்சி தருகிறது. Octa-Core Exynos எனப்படும் 1.8 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4.4 கிட்கேட் சிஸ்டத்துடன் செயல்படுகிறது. இதன் பின்புறக் கேமரா 12 மெகா பிக்ஸெல் திறன் கொண்டதாகவும், முன்புறக் கேமரா 2.1 மெகா பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளன. பாதுகாப்பான இயக்கத்திற்கு விரல் ரேகை ஸ்கேனர், லாக் செய்யக் கூடிய பயோமெட்ரிக் திரை மற்றும் இதயத்துடிப்பு கண்டரியும் மானிட்டர் டூல் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அறிமுகவிழாவில் பேசிய மேலாண் இயக்குநர் கிம், சாம்சங் மொபைல் சந்தையில் முதலிடம் கொண்டிருப்பதால், சிறந்த தொழில் நுட்பத்துடனும் புதிய கூடுதல் வசதிகளுடன் கூடிய மொபைல் போன்களைத் தருவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும், அந்த வகையில் சாம்சங் காலக்ஸி ஆல்பா வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உயர்ரக நிலையில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் இது ஒரு புரட்சியை
ஏற்படுத்தும் எனவும் கூறினார். புதிய தோற்றப் பொலிவு,
அழகு, செயல்திறன், மெட்டல் பிரேம் மற்றும் மிகக் குறைவான தடிமன், குறைந்த எடையுடன், நவீன தொழில் நுட்பம் கொண்டு இந்த போன் உள்ளது.
இதன் மற்ற சிறப்புகள்: பின்புறக் கேமராவின் வீடியோ பதிவு திறன் 4K. தடிமன் 6.7 மிமீ. எடை 115 கிராம். ராம் நினைவகம் 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதயத் துடிப்பினை அறிய S Health 3.0 சென்சார். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 1860mAh திறனுடன் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 39,990. கருப்பு, வெள்ளை, தங்கநிறம், சில்வர் மற்றும் நீல வண்ணங்களில் இது கிடைக்கிறது. ஏர்டெல் நிறுவனம் இந்த மொபைல் போனை வாங்குவோருக்கு முதல் இரு மாதங்களுக்கு 4ஜி டேட்டா 5 ஜி.பி. வரை இலவசமாக அளிக்கிறது.

No comments:
Post a Comment