ஐ ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஷங்கர்

ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே தன் ரிலீஸ் தேதியை தீர்மானித்துவிடுவார் ஷங்கர். அதன்படியே தன் படத்தின் படப்பிடிப்பையும் இதர பணிகளையும் திட்டமிடுவார். ஐ விஷயத்தில் ஷங்கரின் திட்டமிடல்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. தகர்த்தவர் வேறு யாருமல்ல...ஐ படத்தின் தயாரிப்பாளர்தான். இதை ஷங்கரே மனம் குமுறி சொல்லி இருக்கிறார்... 2013 ஆம் ஆண்டு தீபாவளிக்கே ஐ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், தயாரிப்பு தரப்பின் சில காரணங்களுக்காகவே படம் எடுக்க இவ்வளவு காலம் ஆனதாகவும் கூறி உள்ள ஷங்கர், ஏறக்குறைய ஒரு வருடமாக சும்மாவே இருப்பதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார். இந்த இடைவெளியில், அவருடைய அடுத்த படத்திற்கான 3 கதைகளை எழுதி முடித்துவிட்டாராம். 


ஐ படத்தை எடுப்பதற்கு தான் நீண்டகாலம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படும் கருத்தையும் ஷங்கர் மறுத்திருக்கும் ஷங்கர், இதுநாள் வரை தயாரிப்பாளர் சொல்லி வந்த பொய்யையும் அம்பலப்படுத்திவிட்டார். அதாவது, ஐ படத்தின் பட்ஜெட் 150 கோடி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் தயாரிப்பாளர். ஷங்கரோ,ஐ படத்தின் பட்ஜெட் 150 கோடி எல்லாம் கிடையவே கிடையாது. 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டிலேயே ஐ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். 


ஐ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் தரப்பில் சில பிரச்சனைகள் இருப்பதால் நவம்பர் மாதத்தில் ஐ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.


No comments:

Post a Comment