ஹரி - சூர்யா படத்தின் பட்ஜெட் 50 கோடி
விஜய்யைப் போல் ஆக்ஷன் ஹீரோவாக வர வேண்டும் என்ற கனவு சூர்யாவுக்கு உண்டு. அந்த எதிர்பார்ப்பில்தான் சிங்கம், சிங்கம்2, அஞ்சான் போன்ற ஆக்ஷன் சப்ஜெக்ட்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார் சூர்யா. சிங்கம், சிங்கம்2 படங்களைப் போலவே அஞ்சான் படமும் சூப்பர்ஹிட்டாகும், ஆக்ஷன் ஹீரோவாக முதல் இடத்தைப் பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்தார். நடந்ததோ வேறு. அஞ்சான் படம் காலை வாரி விட்டதால் தன் ஆக்ஷன் ஹீரோ கனவுக்கு பங்கம் வந்துவிட்டதை உணர்ந்திருக்கிறார் சூர்யா. எனவே உடனடியாக பக்கா ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஹரியை தொடர்பு கொண்டார். பூஜை படத்தை முடித்த பிறகு தன்னை வைத்து படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சூர்யா. அதற்கு ஒப்புக்கொண்ட ஹரி சம்பளமாக பெரிய தொகையைக் கேட்க, அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க வேறு தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள் என்பதால் அந்தப் படத்தை தன்னுடைய 2டி நிறுவனத்தின் மூலமே தயாரிக்க இருக்கிறார்.


இந்த தகவலை நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டிலம் ஹரியும் உறுதி செய்தார். உங்களுடைய அடுத்த படத்தின் ஹீரோ யார்? என்று ஹரியிடம் கேள்வி கேட்டபோது, எனது அடுத்த படம் சூர்யா சார் கூடத்தான் என்று சொன்னார். இரண்டு, மூன்று கதைகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். அதில் ஒன்று சிங்கம் படத்தின் தொடர்ச்சி! பூஜை படத்தின் ரிலீசுக்குப் பிறகு சூர்யா சாருடன் உட்காந்து, இந்த கதைகளை விவாதிக்க உள்ளேன். அதன் பிறகு தான் எந்த கதையை படமாக்குவது என்று முடிவாகும். ஆனால் என்னுடைய அடுத்த பட ஹீரோ சூர்யா சார்தான்! அது உறுதி என்றார். சூர்யாவை வைத்து ஹரி இயக்கும் படத்தின் பட்ஜெட் 50 கோடியாம்.


No comments:

Post a Comment