தீபாவளிக்கு 2 படங்களும் 3 படங்களின் டீசரும் வெளியாகின்றன
கடந்த பொங்கல் தினத்தில் அஜீத்தின் வீரமும், விஜய்யின் ஜில்லாவும் மோதிக்கொண்டன. இரண்டில் எந்த படம் வெற்றி பெற்றது என்று
சொல்ல முடியாத அளவுக்கு கிட்டத்தட்ட இரண்டு படங்களுமே ஒரே மாதிரிதான் ஓடின. அதையடுத்து, விஜய்யின் கத்தியும், அஜீத்தின் 55வது படமும் ஒரே நேரத்தில்தான் தொடங்கப்பட்டன.

ஆனால், இப்போது விஜய் படம் அஜீத் படத்தை முந்திக்கொண்டு தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. அஜீத் படமோ, பொங்கலுக்கு தள்ளிப்போய் விட்டது. இருப்பினும், தீபாவளி தினத்தில் ஏதோ ஒரு வகையில் தனது ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அஜீத், தனது படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.

அதேபோல், தீபாவளிக்கு திரைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் அனேகன் படமும் பின்வாங்கி விட்டது. ஆனால் தீபாவளி அன்று அனேகன் படத்தின் டீசரை கண்டிப்பாக வெளியிடுகிறார்களாம். இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள வெள்ளைக்கார துரை படத்தின் டீசரும் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட உள்ளதாம். ஆக, தீபாவளிக்கு இரண்டு படங்களும், 3 படங்களின் டீசரும் வெளியாகின்றன.


No comments:

Post a Comment